Tuesday, November 27, 2007

மறு பிறப்பு

எப்படியடி
இந்த ரசாயன மாற்றம்?

இன்று என் சுவாசம் எங்கும்
உன் சந்தன வாசம்
என் வியர்வையிலும்
உன் சுந்தர முகம்

அன்று
மோகத்தின் உச்சத்தில்
உன் சந்திர வதனத்தின்
ஒவ்வொரு செல்லிலும்
நட்சத்திர மின்னல்கள்;
அக் கோடி மின்னல்களில்
என் இமை பொசுங்க
நிலைத்த பார்வையில்
கிடைத்தது
சொர்க்க தரிசனம்


உள்ளே புகுந்த
ஒளிப் பிரவாகத்தில்
எனக்குத் தேவனின் உடல்.


பிறப்புக்கு முந்தைய
இன்மையில்
நிலைத்தோம்;
மீண்டும் பிறக்க மறுக்கிறது
பேதை மனம்.


பிறக்கவா?
இறந்து இறந்து
பிறக்க வா!

ஆலகாலம்

காதற் பாற்கடலை
நாளும் கடைந்தேன்
கண்டதெல்லாம் அமுதங்கள்;
அதுவரை நான்
காணாத சொர்க்கங்கள்.

உள்ளிருக்கும்
தேவனும், அசுரனும்
தீராத பசிப்பிணியில்
வேகம் கூட்டினர்;
விளைந்தது ஆலகாலம்.

காக்கும் நீலகண்டன்
கண்ணில் படுவானோ?

திரி சங்கமம்

நீ நெருப்பு
யாரும் உன்னை நெருங்க முடியாது
எனக்குத் தெரியும்.

ஆனாலும்
உன்னோடு இணைந்து
என்னை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்

விட்டிலாக அல்ல
திரியாக

வா
சேர்ந்து எரிவோம்
சேர்ந்து மடிவோம்.

Tuesday, August 7, 2007

போட்டோ போட்டிக்காக

Photography-in-tamil நடத்தும் போட்டிக்கான எனது பங்களிப்பாக இரு போட்டோக்களை இணைக்கின்றேன்.





Monday, June 18, 2007

கா(த)ற் சிலம்பு

கையிலுள்ள சிலம்பு எனதென்று

கர்வித்திருந்தேன்.


உடைக்கும் வேளையைப் படைத்தாய்.


தெறித்தது மறுப்பு;

பறித்தது உயிர்ப்பு.


நரகம்தான் விளைவு என்ற

நிதர்சன வேளையில்

மனம் சொன்னது,

திரிசங்கு சொர்க்கமே

தெவிட்டாத இன்பம் என்று


ஆம்

காலம் கடந்த சூரிய நமஸ்காரம்.