பெண்ணே
உனது பார்வை விந்தால்
எனது மனப்பையில் துளிர்த்த
அதிசயப் பிறவி
இக்காதல்.
* * *
எனது திருஷ்டியால்
உனக்கு நோய் என்றாய்;
உண்மையெனில்
உன்னால் எப்படி நடமாட முடிகிறது?
'எப்போதும் என் நினைவுதானா' - கேட்டாய்
இல்லை கண்ணே இல்லை
இப்போதெல்லாம் என்னால்
உன்னை மறக்கமுடிகிறது,
என் இதயத் துடிப்புகளின்
இடைவெளிகளில்.
* * *
அன்று
நம் பால நாட்களில்
உனது பரிச்சயம்
இன்று
உன் பார்வைக் கிரணங்களால்
எனக்குப் பச்சையம்.
ஆம்...
என் பாலையிலும்
மழை;
அதுவும்....
பால் மழை.
Tuesday, December 26, 2006
தொலைத்தவள்
என் நினைவுகளைச் சிதைத்து
சிரித்தபடிச் செல்கிறாய்
என் கனவுகளைக் கனமாக்கி
காணாததுபோல் செல்கிறாய்
வீழ்ந்துகொண்டிருக்கும் நான்
எழுவது எங்கே, . . . சொர்க்கத்திலா?
தனித்தனி மனங்கள்
தனித்தனிச் சுமைகள்
நட்பு எனும் நீராவது ஊற்றி
மலர வை முடிந்தால்.
* * *
உன் பார்வையால்
என் தனிமையை இழந்தேன்
உன் சிரிப்பால்
என் உணர்வை இழந்தேன்
உன் குணத்தால்
என் இதயத்தை இழந்தேன்
உன் பாசத்தால்
என்னையே இழந்தேன்
உன்னால் எனக்கு
இழப்பு மட்டுமே.
சிரித்தபடிச் செல்கிறாய்
என் கனவுகளைக் கனமாக்கி
காணாததுபோல் செல்கிறாய்
வீழ்ந்துகொண்டிருக்கும் நான்
எழுவது எங்கே, . . . சொர்க்கத்திலா?
தனித்தனி மனங்கள்
தனித்தனிச் சுமைகள்
நட்பு எனும் நீராவது ஊற்றி
மலர வை முடிந்தால்.
* * *
உன் பார்வையால்
என் தனிமையை இழந்தேன்
உன் சிரிப்பால்
என் உணர்வை இழந்தேன்
உன் குணத்தால்
என் இதயத்தை இழந்தேன்
உன் பாசத்தால்
என்னையே இழந்தேன்
உன்னால் எனக்கு
இழப்பு மட்டுமே.
Subscribe to:
Posts (Atom)