Tuesday, November 27, 2007

மறு பிறப்பு

எப்படியடி
இந்த ரசாயன மாற்றம்?

இன்று என் சுவாசம் எங்கும்
உன் சந்தன வாசம்
என் வியர்வையிலும்
உன் சுந்தர முகம்

அன்று
மோகத்தின் உச்சத்தில்
உன் சந்திர வதனத்தின்
ஒவ்வொரு செல்லிலும்
நட்சத்திர மின்னல்கள்;
அக் கோடி மின்னல்களில்
என் இமை பொசுங்க
நிலைத்த பார்வையில்
கிடைத்தது
சொர்க்க தரிசனம்


உள்ளே புகுந்த
ஒளிப் பிரவாகத்தில்
எனக்குத் தேவனின் உடல்.


பிறப்புக்கு முந்தைய
இன்மையில்
நிலைத்தோம்;
மீண்டும் பிறக்க மறுக்கிறது
பேதை மனம்.


பிறக்கவா?
இறந்து இறந்து
பிறக்க வா!

No comments: