Tuesday, December 26, 2006

பால் மழை

பெண்ணே
உனது பார்வை விந்தால்
எனது மனப்பையில் துளிர்த்த
அதிசயப் பிறவி
இக்காதல்.

* * *

எனது திருஷ்டியால்
உனக்கு நோய் என்றாய்;
உண்மையெனில்
உன்னால் எப்படி நடமாட முடிகிறது?

'எப்போதும் என் நினைவுதானா' - கேட்டாய்
இல்லை கண்ணே இல்லை
இப்போதெல்லாம் என்னால்
உன்னை மறக்கமுடிகிறது,
என் இதயத் துடிப்புகளின்
இடைவெளிகளில்.

* * *

அன்று
நம் பால நாட்களில்
உனது பரிச்சயம்
இன்று
உன் பார்வைக் கிரணங்களால்
எனக்குப் பச்சையம்.

ஆம்...
என் பாலையிலும்
மழை;
அதுவும்....
பால் மழை.

No comments: